பொழுதும் விடிகிறது. அதிகாலை ஆதவனும் வெளிப்பட, காலைக் கதிரவனின் ஆகாசம் நோக்கியப் பயணத்தில். தன் ஒளிக்கதிர்களை உலகுக்கு விரித்து. பரந்து விரிந்த அண்டத்தையே அரவணைக்கும் ஒப்பற்றச் செயலாக. தன்னுள்ளே கொண்டுள்ள ஒளிகளை உலகுக்குக் கொடுத்து. பூமியை கொஞ்சம் கொஞ்சமாக ஒளிரச்செய்து தனது வீரிய நாளங்களைக் கொடுத்து கிழக்கிலிருந்து மேலெழும்பி கொண்டிருந்தான்.

வன மக்கள். அதிகாலை மலர்ந்த வேலையில், பெண்டிர்கள் அனைவரும் வாசலில் சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு. மந்தாரை, பரங்கி மற்றும் ஆவாரம் பூக்களையும் எடுத்து. மாட்டுச் சாணியை உருண்டைபோல உருட்டி, அந்தப் பூக்களை சாணி உருண்டையில் செருகி வாசலுக்கு அழகூட்டி மெருகேற்றி கொண்டிருந்தனர்.

ஆண்கள் சிலரோ வயல்வெளிகளுக்கு ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டும். சிலர் ஏர் கலப்பை மண்வெட்டி கலக்காடு போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வயல்வெளிகளுக்கு போவதும் வருவதுமாக உலவிக்கொண்டிருந்தனர்.

இரவு நடந்த ஆலோசனை மற்றும் இறுதியில் நடந்த எதிர்பாராத அச்சங்களாலும் நேற்றிலிருந்து அதிகாலைவரை உறக்கம் இல்லாத காரணத்தினால் தஞ்சையில் இருந்து வந்திருந்த இரு தளபதிகள் மற்றும் ஏனைய வீரர்கள் வன குடிலில் இருந்த சிறு கூட்டத்தினரும் அசதியில் அயர்ந்து உறங்கியதால் சிறிது தாமதமாகவே விழிப்புற்றணர் வேங்கையின் மைந்தர்கள்.

ஊர் மக்கள் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டிருக்கும்போது. புளியந்தோப்பிற்கு கிழக்கே உள்ள களிறு பயிற்சி திடலுக்கு அருகே பாளைய அரசரின் ரதம் நிற்பதைப் பார்த்து ஆளாளுக்கு ஒருவராக ஆச்சரியமும் வியப்பும் கலந்து பேசிக் கொண்டனர். மேலும் வனத்திற்கு அரசரின் ரதம் வந்துள்ள செய்தியானது. காட்டுத்தீபோல பரவி வனம் முழுவதும் பாளைய மன்னரின் வருகை பற்றி பேசப்பட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருந்த மக்கள் ஒருசேர கூட்டமாக களிறு பயிற்சி மைதானத்திற்கு கூடஆரம்பித்தனர்.
இதற்கிடையே வெளியே காவலுக்கு நின்றிருந்த வீரர்கள். வந்திருந்த மக்களை பூந்தோட்ட குடிலுக்கு அருகே நெருங்கவிடாமல் அவர்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர். அதேவேளையில் கையில் பாளைய லச்சினையோடு வேல் பிடித்த ஒரு வீரன். குடிலுக்கு உள்ளேவந்து அங்கிருந்தவர்களிடம் வெளியே மக்கள் குழுமுவதைப்பற்றி அறிவித்தார்.

அதே நேரத்தில் ஊர் முக்கியஸ்தரும் பள்ளிப்படை அய்யனார் கோவில் பூசாரியாரும் அரக்கபறக்க பூந்தோட்ட குடிலை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர். சோழமண்டல தளபதிகளின் இந்த திடீர் விஜயம்பற்றி அறிந்ததால். அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் வெடவெடத்து போய். குடிலை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர் வன முக்கியஸ்தர்களும் பூசாரியோடு சேர்ந்து கொண்டு குடிலை விட்டு வெளியே வந்த சைவ பற்றாளரும் வனப்பகுதி சிவனடியாருமான வைத்தியலிங்கம். வெளிறிப் போய் வசந்த குடிலின் வாயிலுக்கு அருகே நின்றிருந்த ஊர் முக்கியஸ்தர்களை அருகில் அழைத்து அமரச்செய்தார்.

மரியாதைக்குரிய வன முக்கியஸ்தர்களே. சைவம் தழைத்தோங்க சோழனின் அருளாசியோடு நானிலம் போற்றும் நமது சோழமண்டலம் மட்டுமல்லாது. இன்னும் ஏனைய பிற தேசங்களும் போற்றிப் பாராட்டும். மாமன்னரின் வீரத் தளபதிகளான வல்லவரையர் வந்தியத்தேவன் மற்றும் பார்த்திபேந்திர பல்லவர் அவர்கள். தஞ்சையில் நாளை நடைபெற உள்ள பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நமது பாளைய அரசரைச் சிறப்புவிருந்தினராக அழைக்க நேற்று அரண்மனைக்கு வந்துள்ளனர்.
நமது பாளைய அரசர் இந்த வனத்தின் அருமை பெருமைகளை வீரத் தளபதிகளுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். அதன்பொருட்டே இரு சோழ வெற்றி வீரவேங்கைகளும் இன்று அதிகாலை நமது வனதிற்கு விஜயும் புரிந்துள்ளனர்.

பள்ளிப்படை திருவிழாவினை சிறப்பிக்கும் விதமாக. மாமன்னரின் ஒப்பற்ற தளபதி. வாணர்குல வந்தியத்தேவனும். ஈழம் சென்று வெற்றி வாகை சூடிய பல்லவகுல பார்த்திபேந்திரர் ஆகிய இருவர்களுக்கும் ஊர் முக்கியஸ்தர்களான உங்களின் தலைமையில்.

மற்றும் காவேரியின் கரைகளில் திரிபுரமெரித்த சிவனுக்கு பல கோவில்களை எழுப்பிய இராசகேசரி ஆதித்தரின் வாழ்த்துக்களோடும்.!

ஆஸம்ஸஹ்யாத் ரேரஜஸ்ர ஸ்ருதமத ஸலிந்த
கண்டத்விபேந்த்ரா தா வாராமாகராதப்யுருதர
பங்க ரங்கந் ம்ருகாங்த் காவேரீ தீர யுக்மே
புரமதன மஹாத மாலா ஸிலாபி ஸ்துங்கா
பங்காக்பிஞ்சா நிஜ விஜய பதாகேவ யேக் வ்யதாயி என சைவம் தழைத்தோங்க திரிபுரமெரித்த சிவனுக்கு பல கற்றளிகளை அருளிய சோழ மண்டலத்தாரின் அருளாசியோடு நானிலம் போற்றும் சோழ வனத்தில். என் அப்பன் சிவனின் அருள் ஆசியோடும் நமது பள்ளிப்படை அய்யனார் இரண்டாம் நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நமது நாட்டின் தளபதிகளை அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுகோள் விடுத்து தளபதிகள் வந்துள்ள காரணங்களை முக்கியஸ்தர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

குடிலுக்கு வெளியே இரைச்சல் அதிகமாக  இருந்ததால் என்னவென்று பார்ப்பதற்காக ரெங்கமஞ்சனும் மற்றவர்களும் குடிலில் இருந்து வெளியே வந்தனர். அதற்குள் மக்கள் கூட்டம் சாரை சாரையாக சைவ சமய வளர்ப்பு பூந்தோட்ட குடிலை நோக்கி படையெடுக்க தொடங்கி இருந்தனர்.
பாளைய சிற்றரசர் வேங்கப்பர். பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் வானவராயன் அவர்களும் குடிலை விட்டு வெளியே வந்த அந்த வேலையில். மணிமகுடத்தோடும். ஆடை ஆபரணங்களோடும், அரசவையிலும் வீரம் ததும்பும் போர்க்களங்களிலும். வீற்றிருக்கும்  வீரத் தளபதிகளான பார்த்திபேந்திரன் மற்றும் வாணர்குல தேவனை.! வன மக்கள் எந்த அணிகலன்கள் இல்லாதும்.! பாதுகாவலர்கள் கெடுபிடி என எதுவும் இல்லாது சராசரி மனிதரைப் போல கண்டது வியப்பின் ஆச்சரியக்குறியோடு ஆனந்தமாக. காணாத தெய்வங்களை கண்டது போல அவர்கள் பேசிக் கொண்டனர். இதனிடையே வன மக்களையும் தாண்டி அருகில் உள்ள பாளையத்து மக்களுக்கும் மாமன்னரின் தளபதிகள் இந்த வனத்திற்கு விஜயம் செய்துள்ள அது பற்றி காட்டு தீ போல தகவல் பரவியது.

அண்டை ஊரார்களும் சாரைசாரையாக மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கழுகுவனத்தை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்.

மக்கள் பெருங்கூட்டம் தேன்கூட்டினைச் சுற்றிலும் மொய்க்கும் தேனீக்கள் போல ஆரவாரமாக வந்து கொண்டிருக்க.
வனச் சோலை குடிலுக்கு எதிரே யானைப்போர் களிறு பயிற்சி களத்தில் ஐந்து ஆறு யானைகளுக்கு யானைப் பாகன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் யானையின் தந்தங்களையும், தும்பிக்கைகளையும் பிடித்து போர்ப்பயிற்சி செய்து கொண்டிருக்க. யானையின் மேல் இரு வீரர்கள் அமர்ந்து யானைக்கு வாள். ஈட்டி. சுளுக்கி போன்ற பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்சி. வீரத்தளபதி களை காண வருகை தந்திருந்த மக்களுக்கு ஒரு புதிரான வேடிக்கையாகவே இருந்தது.

வேடிக்கை பார்த்த மக்கள் அல்லாது சோழமண்டல வீரத் தளபதிகளான வல்லவரையரும் பார்த்திபேந்திரரும் அந்த அழகிய போர் பயிற்சி காட்சியினை கண்டு மகிழ்வுற்றனர்.
குடிலின் வாயிலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவர் மனதிலும் ஒரு சேர ஒரு எண்ணம் தோன்றியது.
ஈழப் போருக்குப் பிறகு தாங்கள் போரிலும் களப் பயிற்சியிலும் ஈடுபட்டு வெகு நாட்கள் ஆனதால் சற்று உடல் சோர்வுற்று இருப்பதையும் கண்ட இவர்கள்.!
இந்த யானை களத்தில் நடைபெறும் பயிற்சியில் தாங்களும் ஈடுபட்டு, உடல் உறுதியும் மன உறுதியையும் சோதனை செய்து கொள்ள இன்று இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என அந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள ஆர்வமாக இருந்ததை இருவரும் பகிர்ந்து கொள்ள. பாளையத்து அரசர்  வேங்கப்ப உடையார் மூலம் யானைக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யானையின் மேல் அமர்ந்து இருந்த இரண்டு தடித்த கருத்த முரட்டு உருவங்கள் ஏணிக்கயிறு மூலம் யானையின் மேலிருந்து கீழிறங்கி குடிலை நோக்கி ஓடிவந்தனர், சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் எனப் பெயர்கொண்ட பயிற்சியாளர்கள்.

தலையில் அணிந்திருந்த முண்டாசுகளை கழற்றி அக்குளில் வைத்துக் கொண்ட அவர்கள்.
வாழ்க வாழ்க. தளபதிகள் வாழ்க. கழுகு வனம் வருகை தந்த களப்போராளிகளே வருக வருக.
தனது புலிப்பாய்ச்சலால் சிம்மவிஷ்ணுவாக அரிதாரம்‌ ஏறி சமண சைவம் செழித்தோங்க அரும்பாடுபட்ட சுந்தரரின் புதல்வர். தஞ்சாலூரில் முத்தரையர்களை வென்றெடுத்து அரிஞ்சய சோழரின் வழித்தோன்றலாய்.!
ஈழம் வென்றெடுத்த வேந்தரின்,
வலக்கை இடக்கையாக. அற்புத பலம் கொடுக்கும் வீரத் தளபதிகளுக்கு வணக்கம்.

தங்கள் வருகையால் இந்த ஆனைக்களப் பயிற்சி மண்டபம் பெரும்பாக்கியம் பெறுகிறது.
மேலும் தாங்கள் இங்கு உள்ள பயிற்சி திடலில் ஆணையின் மேல் ஏறி பயிற்சி போரில் ஈடுபடும் பட்சத்தில்.! எங்களை பாளைய காலாட்படைக்கு மேன்மேலும் புகழ் சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தாங்கள் வந்து இந்த திடலின் இன்றைய நாள் பயிற்சியை தொடங்கி வைக்கும் படி எங்கள் யானைகள பயிற்சியின் தலைவர் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் சோழ தளபதிகளையும் பார்த்து புன்முறுவலோடு வேண்டிக்கொண்டனர்.

ம்..ம்..ம்.. என கர்ஜித்த குரலோடு ஆகச் சிறந்த பாளையத்து வீரர்களே.
சோழ தேச காலாட்படை தோழ வேந்தர்களே.
வீர புலியாக. வெற்றி வேங்கைகளாக. ஆயிரம் போர் கண்ட அரசர் மனுநீதிச் சோழர் குல‌ திலகம். விஜயாலயர் வென்ற ராஜ்யத்தின் அரும்படைக்கண்ட அரசர்.வடவேங்கடம் முதல் தென்குமரிவரை புலிக்கொடி கொடி நாட்டிய பூலோக இந்திரன். நமது மாமன்னர் அருண்மொழித்தேவர் போர் படையில் வீரம் மிக்க முனையதிரையர்கள் பங்களிப்போடு. காலாட் தோழ உடையாரின் வீரர்களும் பங்கு கொண்டு நமது சோழமண்டல வெற்றிக்கு அரும்பாடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாடு அறியும்.

இந்த வேளையில் மன்னரின் சார்பாக உங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம் என அந்த களப்பயிற்சியாளர்களு தங்கள் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு மட்டுமல்லாமல்.
நானும் எனது நண்பனும் இன்றைய நாள் யானைக்களப்பயிற்சியில் ஈடுபடுகிறோம் என  அவர்களிடம் கூர் கூறினார் வாணர்குல வல்லவரையர்.

மாமன்னரின் வீரத் தளபதிகள் வருவதை அறிந்த அன்றைய போர் பயிற்சி மைதானம் வெகு சுறுசுறுப்பாக காணப்பட்டது. சுற்றிலும் கூடியிருந்த பார்வையாளர்களான மக்களின் வேல் வேல் வெற்றி வேல் கோஷத்தோடு ரணகளபபட்டது.
உடையார் ஸ்ரீ இராஜராஜத் தேவரின் வீரத் தளபதிகளின் வருகையை அறிந்த முனையதிரையர்களும் காலாட்கள் தோழ உடையார் பாளையத்து வீரர்களும் அதிகாலை முதலே பைந்தமிழ் குடிலுக்கும். போர்ப்பயிற்சி திடலுக்கு பாதுகாப்பு வளையத்தோடு அரண் அமைத்து. காலாட் படை சேனைகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு திசையிலிருந்து திடலைச் சுற்றிலும் செல்லும்படிக் கட்டளையிட்டார் முனையதரையத் தளபதி புத்தவர்மன்.

வந்தியத்தேவனும் பார்த்திபேந்திர பல்லவரும் களிறுப் பயிற்சி திடலுக்கு நடுவே வந்து நிற்க. இரண்டு பெரும் யானைகள் அருகே வந்து நிறுத்தப்பட்டன.
யானைகள் என்றால்.! இரு மலையின் முகடுகளை பெயர்த்து எடுத்து திடலின் நடுவே வைத்தது போலவும். வானத்திற்கும் பூமிக்கும் இடையே அமைந்த மலைபோல அவ்வளவு பெரிய உருவத்தோடு ஆடி அசைந்து வந்தன இரண்டு பெரும் கருத்த உருவங்கள்.
அண்ணார்ந்து பார்த்தாலே. பார்ப்பவர்களை அலறியடித்து ஓட வைக்கும் உருவங்கள். வீரத்தளபதிகள் இருவருக்கும் இன்றைய நாளில் தங்களுக்கு ஒரு பெரும் ஆரோக்கியமான விளையாட்டு இருக்கப்போகிறது என அகமகிழ்ந்து யானையின் மேல் ஏறுவதற்காக கயிறுப்படிகளைகளை யானை மேல் தூக்கி எறிந்து யானையின் மேல் ஏறினர்.

ஆயிரக்கணக்கான கலைப்படைப்புகள் சோழர்களாலேயே உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன இந்த யானைக்குப் போர் பயிற்சி அளிக்கும் கலைபோல.!
கலைகளின் பொற்காலம் ராஜராஜ சோழனின் காலம் என்றால். அது மெத்த பொருந்துவது முதலாம் ராஜராஜன் கோலோச்சிய காலமேயாகும்.

“பல்யானை கோக்கண்டனான ஆதித்தன்” என எட்டாம் நூற்றாண்டிலேயே யானையை போருக்கு பயன்படுத்திய ஆதித்தர் என வரலாறு கூறுகிறது.
அதே காலகட்டத்தில் சோழத்தின் மீது பலவிதமான படையெடுப்புகள். குடும்பப் பகை, வெறுப்பு, அதிகாரமமதை, போட்டி,   பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வஞ்சகம் என சூறாவளியாய் சுழன்றடித்துக்கொண்டிருந்தது‌ அந்த தேசத்தில்.

மேற்கண்ட சூழலில் தான் சோழதேசம் கண்ட பல்லவ தளபதிகள் இருவரும் கழுகு வனத்தில் உள்ள யானை களத்தில் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

மேலே ஏறிய பார்த்திபேந்திரரும்  வல்லவரையரும் ஆளுக்கு ஒரு கையில் ஈட்டியும் மறு கையில் பாளைய லட்சினை பொறிக்கப்பட்டிருந்த கேடயத்தையும் வாங்கிக்கொண்டு யானையை முன்னே செல்ல அந்த போர் படை மலைகளுக்கு அதன் பாஷையில் உத்தரவிட்டனர்.

இவர்கள் பேசிய பாஷைகளை உள்வாங்கிய அந்த கருத்த பெருத்த இரு உருவங்கள் களத்தில் இரு முனைகளுக்கு எதிரெதிரே போய் நிகளத் திடலுக்கு நடுவில் நின்றிருந்த போர்க்களப் பயிற்சியாளரும் முனையதரையர் படையினரின் நிறுவன  மேற்பார்வையாளருமான புத்தவர்மன் இரு யானைகளுக்கும் தங்களது திறமைகளை காண தயாராக இருக்கும்படி அவைகளுக்கு புரியும்படியான சம்பாஷனைகளை உரத்த குரலில் உத்தரவிட்ட சில நாழிகைகளில் இரு பெருத்த மலை முகடுகளும் எதிரெதிரே வீராவேசத்தோடு ஓடிவந்த வேளையில்.! பூமி அதிர.! பார்வையாளர்களாக வந்திருந்த மக்கள் கொஞ்சம் கலக்கத்தோடு பயத்தோடும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்தில் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கிபி எட்டாம் நூற்றாண்டில்  திருமாவளவன் என அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலர் ஆட்சியில் இதேபோல யுத்தம் ஒன்று தொண்டைநாட்டில் நடைபெற்றது.

ஆதித்தர் அமர்ந்திருந்த யானையும், எதிரே அபராஜிதர் அமர்ந்திருந்த யானையும் நேருக்கு நேர் சந்தித்தன. என்ன நடக்கப்போகிறது என்று ஒட்டுமொத்த களமும் உற்று நோக்கிய அந்த கணப்பொழுதில் தான் ஆதித்தர், அபராஜிதரை நெருங்கினார். நீண்டதொரு வாளை கரத்தில் ஏந்தியாவாறு ஆதித்தர். ஆதித்தரை சமாளிக்கும் முனைப்புடன் அபராஜிதர். இருபக்க களவீரர்களும் திக்  திக் என பரபரப்பில். நகரும் தன் யானையின் மேல், கரத்தில் வாளுடன் எழுந்து நின்றார் ஆதித்த சோழர். ஆதித்தரின் நகர்வை யூகிக்கும் அவகாசம் அபராஜிதருக்கு கிடைக்கவில்லை. மின்னலை விஞ்சும் வேகத்துடன் அபராஜிதரை நோக்கி பாய்ந்தார் ஆதித்த சோழர். அதே வேகத்தில் அவரது வாளும் சுழன்றது.  என்ன நடந்தது என்பதை உணரும் முன்பே அபராஜிதரின் உடல் இரு துண்டானது. ஆதித்தச் சோழரின் இந்த ஒற்றை வாள்வீச்சு சோழத்தின் வீரத்தை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்ததுள்ளது சோழ மண்டல பரம்பரையில்.

மீண்டும் இதேபோலொரு யுத்த களம் கழுகு வனத்தில் இன்று அரங்கேறியது.

யானையின் மேல் அமர்ந்திருந்த வல்லவரையர் எதிரே பெரும் உருவத்தில் அமர்ந்துகொண்டு. வீராவேசத்தோடு வந்து கொண்டிருக்கும் பார்த்திபேந்திர பல்லவரின்  காலிற்க்கு இடையே தனது இலக்கினை வைத்து ஒரேடியாக அந்த ஈட்டியை எறிந்து விட வேண்டும் என்ற முனைப்போடு தனது வலது காலின் பெரு விரலால் யானையின் கழுத்தில் ஒரு அழுத்து அழுத்த.! ஓடி வந்து கொண்டிருந்த யானை இன்னும் வெகு உக்கிரமாக தனது ஓட்டத்தோடு. பிளிறும் சத்தத்தோடு ஓடி வந்து கொண்டிருக்கிற அதேவேளையில் எதிரே உள்ள யானையில் அமர்ந்திருந்த பார்த்திபேந்திர பல்லவனோ.!

வல்லவரையரின் உள்மனதை அறிந்து கொண்டு. தாமும் அதே எண்ணத்தோடு வந்தியத்தேவனின் ஈட்டியையும் கேடயத்தையும் ஒரே அடியில் வீழ்த்த வேண்டும் என்ற அந்த முனைப்போடு வலது காலின் பெரு விரலால் யானையின் காதுக்கு பின்னால் உள்ள பக்கத்தை ஒரு உதை உதைக்க.! தீடீரென கத்தியை யானை. முன்னங்கால்களை மேலே தூக்கி மேலெழும்பிய போது சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்த பார்த்திபேந்திர பல்லவன் சிறிது நிலை தடுமாறி போனாலும்.! உடனடியாக விழித்தெழுந்து யானையை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். யானையின் வேகம் என்பது இப்போது கட்டுக்கடங்காமல் பெரும் வேகமாக எதிரே உள்ள யானையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
இடைப்பட்ட தூரத்தில் பூமி பிளந்து ஒரு பிரளயம் வந்தது போல் நிலம் அதிர்ந்தது. யானைகளின் ஓட்டத்தினால் எழும்பிய புழுதி மண்டலம், வானத்தை நோக்கி நகர்ந்தது. வாட்கள் மோத அந்த புழுதியின் ஊடே ஒரு மின்னல் கீற்று. ஈட்டியில் நானேற்றும் ஓசை இடியாய் இடித்தது. யானைகளின் ஓட்டத்தினால் படர்ந்த புழுதியில் முன்னேயும் பின்னேயும் என்ன நடக்கிறது என அறியாமல் பார்வையாளர்களான மக்கள் குழம்பிப் போயிருந்த வேளையில் டம்டம் டம்டம் என பயங்கரமான வாள் வீச்சு சத்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க.! செம்மண் புழுதி முழுவதுமாக அந்தத் திடலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க உள்ளே என்ன நடக்கிறது எனவும் தெரியவில்லை.

இரு கருத்த பெரு உருவங்களான யானைகளையும் பார்க்க முடியவில்லை பார்வையாளர்களாக வந்திருந்த மக்களுக்கும் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்தி கொண்டிருந்த காலாட்கள் தோழ உடையார் வீரர்களுக்கும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த முனையதரையர் படையினருக்கோ. எத்தனையோ எண்ணிலடங்காப் போர்களில் பங்கு கொண்டிருந்தாலும், மனுநீதிச்சோழன், சிபிசக்கரவர்த்தி, கரிகாலன் என வம்சாவளியாக தொடர்ந்து. தற்போது திருப்புறம்பியம் வரை போரில் கண்ட காட்சியை இங்கு மறுகணம் நினைவில் கொண்டு வந்தனர்.  இருந்தாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால்.  வீரத்த தளபதிகளுக்கும் ரங்கமஞ்ச ஆதித்தருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்பதில் முழு முனைப்போடு கையில் வேலுடனும் வாளுடனும் மற்றும் ஈட்டியும் சுளுக்கிகளையும் எடுத்து கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டிருக்க ஆகாய சூரியன் தனது பணியை இயல்பாக செய்து கொண்டிருந்த வேளையில் காலையில் எழுந்திருந்த கதிரவன் இந்த போர்க் களப் பயிற்சி விளையாட்டெல்லாம் முடிந்த போது நடு உச்சியில் நின்று கொண்டிருந்தான்.
விளையாடி விளையாடி களைப்பு பெற்ற வீரர்களுக்கு விளையாட்டு மயக்கமும் பசி மயக்கம் ஒருங்கே எடுத்துக்கொண்டதால் விளையாட்டை நிறுத்தி சிறிது இடைவெளி கொடுக்க வேண்டுமென யானையின் மீது இறங்கி குடிலை நோக்கி நடந்து வந்தனர்.

உள்ளே இருந்து கம்பு சோளம் திணை இவற்றினால் செய்யப்பட்ட களியும். சோறும் பானையில் கொண்டுவந்து பரிமாறப்பட்டது.
களியை அருந்திய இருவரும் தாங்கள் எத்தனையோ நாடுகளுக்குப் பயணம் சென்று பலவிதமான உணவுகளை உண்ட போதும்.! மக்களோடு மக்களாக போர்க் களப் பயிற்சி பெற்று அந்த உடல் அசதியில் சாப்பிடும் இந்த உணவினை நாங்கள் அமிர்தத்திற்கு இணையாக கருதுகிறோம் என ஒரு சேர இருவரும் கூறியதை பார்த்து அந்தக் குடிலில் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரும் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்தனர் இரு தளபதிகளுக்கும்.

பள்ளிப்படை அய்யனார் கோவிலில் இரண்டாம் நாள் திருவிழா இன்று இரு சோழ தளபதிகளும் சிறப்பு விருந்தினராக வந்துள்ள தினத்தில்.! அதுமட்டுமில்லாது சுற்றியிருந்த கிராமத்து மக்களும் படைத்தபதி மற்றும் பாளைய மன்னரின் வீர தளபதிகளை பார்க்கவேண்டும் என்ற ஆவலோடு வந்திருந்ததால். கட்டுக்கடங்காத கூட்டத்தில் இரண்டாம் நாள் பள்ளிப்படை திருவிழாவிற்கான வேலைகள் ஆயத்தமாகி கொண்டிருந்தன ஏரிக்கரையில்.

வேங்கப்ப உடையார். ரங்கமஞ்ச ஆதித்தன். வல்லவரையர் மற்றும் பார்த்திபேந்திரர் அனைவரையும் சிறப்பு அழைப்பாக அய்யனார் கோவிலுக்கு பூங்காவன குடிலில் இருந்து 30 வகை மேள வாத்தியங்கள் முழங்க 300 மக்கள் புடைசூழ இருமருங்கிலும் பத்து பதினைந்து குதிரை குதிரைகளும் ஐந்து ஆறு யானைகளையும். யானைகளின் மேல் முரசு முழங்க முழங்க பல்வேறு அலங்கரிக்கப்பட்ட மலர் மாலை சூட்டி.! மேள தாள வாத்தியங்களுடன் அய்யனார் பள்ளிப்படை கோவிலுக்கு அழைத்துவந்தனர் ஊர் முக்கியஸ்தர்கள்.


கற்றளி அய்யனார் கோவில் எங்கும் மாலை வேளையில் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது.
அய்யனார் கோவிலின் கருவறையில் உள்ளே இருந்து ஆரத்தி தட்டோடு வெளியே வந்த கோவில் பூசாரி தங்கராசு.
வெளியே நின்றிருந்த இரு வீரத் தளபதிகளுக்கும் வெற்றி திலகமிட்டு ஆவார கொன்றை மலர் மாலைகளை அணிவித்து கோவிலின் வாயிலிற்கு எதிரே கற்றளிப்படை குதிரை சிலைக்கு அருகே போடப்பட்டிருந்த நான்கு பெரிய அமர்வுகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
கற்றளி மண்டபத்தில் அய்யனார் கோவில் பூஜைக்குத் தயார் நிலையில் இருந்தது. ஆசனங்களில் இருந்து இறங்கி கீழே பட்டாடை விரிக்கப்பட்டு பாளைய அரசர், சோழத்தளபதிகள், வன மக்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம நிர்வாகத்தைப் பாதுகாக்கும் முனையதரையர்கள் என அனைவரும் அமர்ந்திருந்தார்கள். ரங்கமஞ்ச ஆதித்தனால் எக்காளம் அடித்தும் முழாம் அடித்தும் கோவில் பூஜை ஆரம்பிக்கப்பட்டது..

பூஜை முடியும் நேரம் நெருங்கியது. அனைத்து மக்களும் அரோகரா அரோகரா எனவும். வேல் வேல் வெற்றி வேல் என முழங்கினார்கள்.
எத்தனையோ திருநாளின் நிகழ்வுகளை கண்டிருக்கிறது இந்த வனதேசம்.
எண்ணிலடங்கா போர்கள்.
மகத்தான சாதனைகள்.
நெஞ்சதிரும் சரித்திரங்கள்.
எழில்மிகு கற்றளிகள்.
கற்பனைக்கெட்டா மர்மங்கள்.
விண்ணைமுட்டும் கோபுரங்கள்.
வியப்பூட்டும் விந்தைகள் என அத்தனையும் கண்ட சோழ மண்டல கழுகுவனம், இன்றைய தேதியில் தஞ்சாவூரில் பெருவுடையார் கோவில் அமைத்த அருள்மொழித்தேவரின் படைத்தளபதிகள் இங்கு வந்து சிறப்புற கலந்து கொண்டது வன மக்கள் அனைவருக்கும் அகமகிழ்ந்து வேல் வேல் வெற்றிவேல் எனவும் அரோகரா அரோகரா எனவும் மறுபடியும் மறுபடியும் உரக்கக் கூறினர் உற்சாகம் குன்றாது.
அய்யனார் கோவில் வாயிலில் இருந்து சங்கேத மொழியில் சங்குநாதம் ஊதி‌ இசை முழங்கியது.
இதை உணர்ந்த வனக் கலைஞர்களும் மக்களும் நெரிசலான ஏரியில் இருபுறத்திலும் குமிழ. ஆதித்த ரங்க மஞ்சன் மீண்டும் முழாம் இசைத்து பண்ணிரு திருயிசை மீட்டினான்.

தீபாராதனை காண்பிப்பதற்காகக் பாளைய அரசர் அழைக்கப்பட்டார். எழுந்து சென்ற பாளைய அரசர் வேங்கப்ப உடையார் தீபாராதனையை காட்ட வீரர்களும் மக்களும் அனைவரும் கரகோஷம் எழுப்பி இறையில் மூழ்கினர் தீபாராதனை காட்டினார். மக்கள் சபையோர் தளபதியார்கள் என அனைவரும் கரம்கூப்பி பள்ளிப்படை அய்யனாரை வணங்கினார்கள். அரசரின் மனம் நிறைந்தது.. கோவிலில் கூடியிருந்த மக்களும் தத்தம் இல்லங்களுக்குப் கலைந்து செல்ல செல்ல தொடங்கியிருந்தனர்.
மக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றபின் பள்ளிப்படை அய்யனார் கோவிலில் பாளைய வீரர்களும் முனையதரையர் வீரர்களும் மற்றும் தஞ்சையில் இருந்து வந்திருந்த வீரத் தளபதிகளும் அவர்களுக்குக் காவலாக வந்திருந்த நான்கு வீரர்கள் மட்டும் ஏரியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
மேலும் கூடியிருந்த வீரர்களைப் பார்த்து உரக்கக் கூறினார்.

எனது அன்பு மிக்க முனையதரைய வீரர்களே. கூடியிருக்கும் பாளைய காலாட்தோழ வீரர்களே.
வல்லவரையன் மற்றும் பார்த்திபேந்திரன் அருளாசியோடு நமது சாம்ராஜ்யம் சோழ சாம்ராஜ்யத்தோடு பரந்து விரிந்த அமைப்பை பெற்றுள்ளது.
அதற்கு பெரும் காரணமாக உள்ள காஞ்சிபுர வானரர் வல்லவரையர் வந்தியத்தேவர் அவர்களின் புகழ் சோழ தேசத்தில் மேன்மேலும் ஒலிக்க காலாட்கள் தோழ உடையார் எனும் இந்தப் பாளைய சிற்றரசு வாழ்வு உள்ள வரை ஊற்ற உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த கட்டளைப்படி அய்யனார் கோவிலின் முன்பு ஆணையிட்டு உறுதி கூறுகிறேன். என தளபதிகள் இரு வரிகள் முன்னிலையிலும் தங்களது வீரர்களின் முன்னிலையிலும் ரங்கப்ப உடையார் உரக்கக் கூறி சபதம் ஏற்றுக்கொண்டார்.