2019 மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட இறுதி பட்டியலை இன்று (மார்ச் 22) காலை வெளியிட்டார் டிடிவி தினகரன்.

மக்களவை தேர்தலில் அதிமுக- அமமுக கட்சிகள் நேரடியாக 20 இடங்களில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமமுக எந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பது வரும் 25ம் தேதி தெரியும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 17ஆம் தேதி வெளியிட்டார் தினகரன். அதில், 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அவர் அறிவித்தார். மத்திய சென்னை தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளரை நிறுத்துகிறது. அதன்படி, 25 தொகுதிகள் போக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார் தினகரன்.

மக்களவை தேர்தலுக்கான 14 வேட்பாளர்கள் பட்டியல்

வட சென்னை – சந்தான கிருஷ்ணன்

அரக்கோணம்- பார்த்திபன்

வேலூர்- பாண்டுரங்கன்

கிருஷ்ணகிரி- கணேசகுமார்

தருமபுரி- பழனியப்பன்

திருவண்ணாமலை- ஞானசேகர்

ஆரணி- செந்தமிழ்

கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன்

திண்டுக்கல்- ஜோதிமுருகன்

கடலூர்- கார்த்திக்

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்

விருதுநகர்-  பரமசிவ ஐயப்பன்

தூத்துக்குடி- டாக்டர் ம.புவனேஸ்வரன்

கன்னியாக்குமரி- லெட்சுமணன்

சட்டமன்ற தொகுதிகளுக்கான 9 வேட்பாளர்கள் பட்டியல்

சோளிங்கர் – மணி

பாப்பிரெட்டிபட்டி – ராஜேந்திரன்

நிலக்கோட்டை- தங்கதுரை

திருவாரூர் – காமராஜ்

தஞ்சாவூர் – ரெங்கசாமி

ஆண்டிபட்டி – ஜெயக்குமார்

பெரியக்குளம் தனி தொகுதி – டாக்டர் காதிர்காமு

விளாத்திகுளம் – டாக்டர் ஜோதிமணி

தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) – முருகசாமி

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளுக்கும் அமமுக கூட்டணி வேட்பாளர்களை அறிவித்த தினகரன் மீதமிருக்கும் மக்களவை தொகுதி புதுச்சேரி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியான ஓசூர் தொகுதிக்கும் மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும், ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். தங்க தமிழ்ச்செல்வனின் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக ஒன்றிய செயலாளரான ஜெயக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பாப்பிரெட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பழனியப்பனை தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மாசெ. ராஜேந்திரனும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமாமகேஸ்வரிக்கு பதிலாக டாக்டர் கே.ஜோதிமணியும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் தினகரன்.