தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பில் 14 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

நாடுமுழுவதும் மக்களை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. கடந்த 19ஆம் தேதி அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதேபோல தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை திமுகவே கைப்பற்றும் எனவும் தெரிவித்திருந்தது.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் 22 தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ளது. இதில் 14 இடங்களை திமுக பிடிக்கும் எனவும், 3 இடங்களை அதிமுக கைப்பற்றும் எனவும் இழுபறியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

திமுக – 14 தொகுதிகள்

அதிமுக – 3 தொகுதிகள்

இழுபறி – 5 தொகுதிகள்