பா.ஜ.க. வுக்கு எதுவும் நல்ல செய்திகள் இல்லை. கடந்த இரண்டு நாட்களில் அது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலுள்ள 23 தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகியதுதான் அதற்குக் கிடைத்த சமீபத்திய கெட்ட செய்தி.

அருணாச்சல பிரதேசத்தில், இரண்டு மந்திரிகள் மற்றும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 20 பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தேசிய மக்கள் கட்சியில் (NPP) சேர்ந்தனர். இந்த நடவடிக்கை சட்டமன்றத்தில் NPP  கட்சிக்கு 13 பேர் எனும் வலிமையைப் பெற்றது. 60 உறுப்பினர்கள் உள்ள அவையில் பாஜகவுக்கு-க்கு இன்னும் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளன.

 

அருணாச்சல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11 ம் தேதி 2 மக்களவை உறுப்பினர்கள் உட்பட 60 புதிய உறுப்பினர்களை மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.

“ஆட்சியிலிருக்கும் மந்திரிகள் குமார் வாய் மற்றும் ஜர்கர் காம்லின் மற்றும் பிற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் முறையாக இணைந்தனர். முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் ஜார்பும் காம்லின் மற்றும் இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 8 பிற பாஜக தலைவர்கள் எங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் “என்று ரோயிங் முச்சூ மித்தியின் NPP சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பா.ஜ.க. உடனான கூட்டணியுடன் மேகாலயா அரசாங்கத்திற்கு NPP தலைமை தாங்குகிறது. அதே போல பாஜக தலைமையிலான வட கிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் NPP ஒரு அங்கமாக உள்ளது, ஆனால் இரு கட்சிகளும் மக்களவை தேர்தல்களில் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.

NPP மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும், நாகாலாந்தில் NDPP தலைமையிலான அரசாங்கத்திலும் பாஜகவின்.யின் தோழமைக் கட்சியாகவும் உள்ளது.

திரிபுராவில் பாஜக மாநில துணைத் தலைவர் சுபால் பாவ்மிக் செவ்வாயன்று காங்கிரஸில் இணைந்த மூன்று பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்தார். மற்ற இரண்டு முன்னாள் அமைச்சர் பிரகாஷ் தாஸ் மற்றும் டெபாசிஷ் சென் ஆவோர்.

காங்கிரசுக்கு வந்த பிறகு பாஜக தலைவர் பௌமிக்,  மக்களவை தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கப்பட்டதற்குச் சிலர் அவரை எதிர்த்து வருவதாகவும் கூறினார். “கட்சிக்கு நான் ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை, அங்கு எந்த ஜனநாயகமும் கிடையாது. ஆதலால் காங்கிரஸில் மீண்டும் இணைவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

1970 களின் இறுதியிலிருந்தே பௌமிக் காங்கிரஸுடன் இருந்தார். 2008 ஆம் ஆண்டில் காங்கிரஸின் சட்டமன்றத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2013 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பின்னர் “திரிபுரா பிரகதிஷீல் கிராமீன் காங்கிரஸ்” எனத் தனது கட்சியைத் துவக்கினார். பின்னர் அவர் 2014 இல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

தேசம் முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை வீசுவதை மக்கள் மட்டும் அல்ல இதுபோல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் உணர்ந்துள்ளதை இவர்களின் கட்சி தாவல்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.