ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டதில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் அளித்துள்ளார் என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல்.

தேசிய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்புப் பணிக்குழு தலைவர்களின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று(அக்டோபர் 14) நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதில், அதிகபட்சமாகத் தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 13 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அலோக் மிட்டல், இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ஹாமின் வீடியோக்களை பார்த்துதான் தாங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர தூண்டப்பட்டதாகத் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட சிலர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.