ஆய்வுக்கு வர மறுத்த கிராமநிர்வாக அலுவலரை தாம்பூலம் தட்டுவைத்து அழைத்திருக்கிறார் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூர் கிராமத்தில் வடவாறு என்ற வாய்க்கால் அமைதிந்திருக்கிறது. அந்த வாய்க்காலின் நீர்ப்பாசனம் மூலமே கிராமப்புற விவாசியிகள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் வாய்க்காலின் பல பகுதிகள் சரியாக தூர்வாராததோடு  பலரின் ஆக்கிரமிப்பிலும் இருந்து வந்திருக்கிறது. இது குறித்து மக்கள் பல முறை கிராமநிர்வாக அலுவலருடன் புகார் அளித்தபோதும் அதிகாரி பாலசுப்ரமணியன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அறிந்த அத்தொகுதி எம்.எல்.ஏ ராஜா தாம்பூலம் தட்டுவைத்து அவரை அழைத்திருக்கிறார்.

மேலும் நேரில் சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்த டி.ஆர்.பி. ராஜா, கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகளை ஆலோசனை செய்ய அழைத்திருக்கிறார் இருந்தும் அலுவலர் பாலசுப்ரமணியன் நேரில் வர இழுத்துதடித்ததால், டி.ஆர்.பி. ராஜா.மன்னார்குடி வட்டாச்சியர் அலுவலத்திற்கு சென்று கிராம நிர்வாக அதிகாரியை தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம் வைத்து, நாளை ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.