கௌரி லங்கேஷ் கொலைவழக்கு தொடர்பாக பெங்களூர் போலீஸார் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள், அதில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த அபினவ் பார்த் என்ற நபர்மேல் சந்தேகம் எழுந்துள்ளது. இவர் 2011 முதல் 2016வரை சனாதன் சன்ஸ்தா அமைப்பை மூலம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து பயிற்சி பெற்றவர் என்றும் மேலும் பல இடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சந்தேகப்படக்கூடிய அபினவ் பாரத் பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கிறார். அதில் முக்கியமாக  சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த லோக் சபா வேட்பாளர் பிராகிய சிங் தாகூரும் மாலேகாவ் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் சிறப்பு விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே மூன்றுபேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நான்குபேர் பாபுஜி மற்றும் குருஜி முகாம்களில் கலந்துகொண்டவர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

நாட்டின் பல்வேறு இடங்களில் சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்திய முகாம்களில் கலந்துகொண்டவர்கள் டாங்கே, கல்சன்கரா, அஸ்வினி சவுகன் ஏற்கனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்படி குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர். இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், சனாதன் சன்ஸ்தா அமைப்பு கிட்டத்தட்ட 19 முகாம்களை அமைத்து விதவிதமான பயிற்சிகளை அளித்துள்ளது. அதில் ஐந்து குண்டுவெடிப்பு நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் மூலம் பயிற்சிபெற்றவர்கள்தான் பகுத்தறிவுவாதிகளாகக் கருதப்படும் நரேந்திர தபால்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் கொலைக்குத் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது

அமித் தேக்வேகர், கலஸ்கர், பன்கர்கர், சுர்யவன்ஷி, கனேஷ் மிஷ்கின், அமித் பட்டி, பார்த் குர்னே உள்ளிட்ட சிலர் இந்த முகாம்களில் கலந்துகொண்டவர்கள் என்று கண்டறிந்துள்ளனர்.