நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வாரம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உயிர் இழந்தனர். இச்சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்

மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மசூதி மூடப்பட்டது. மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதி வாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிவிக்க வேண்டும் எனவும் கிறிஸ்ட்சர்ஸ் போலீசார் தெரிவித்திருந்தனர்.

மிகுந்த பாதுகாப்புடன் இருந்த அந்த மசூதி இன்று திறக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் மக்கள் தொழுகைக்காக மசூதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று போலிஸாரால் அறிவிக்கப்பட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.