நீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை எனச் சட்டப்பேரவையில் பேசினார் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராம புற மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இதனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், மாணவர்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு வருகின்றனர்.

நடப்பாண்டு நீட் தேர்வில் தோல்வியுற்ற தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா, நீட் தேர்வினால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று பேசினார். மேலும் பேசிய அவர், ”தனியார் பயிற்சி மையங்கள் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வுதான் நீட் தேர்வு. நீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை.” என்று பேசினார்.