2019-20 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமான அறிவிப்புகள்:

  • ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம்.
  • ஜீரோ-பட்ஜெட் வேளாண் முறையை ஊக்குவிக்க நடவடிக்கை.
  • 2024 ஒவ்வொரு வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியா வரும்போது, எவ்வித தாமதமுமின்றி, ஆதார் கார்டு வழங்க பரிந்துரை.
  • வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் கார்டு (அ) ஆதார் கார்டை பயன்படுத்தலாம்.
  • வருமான வரி செலுத்துவதற்கான குறைந்த பட்ச ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்கள் 3% வரி செலுத்த வேண்டும். 5 கோடிக்கு அதிகமான வருமானம் உள்ளவர்கள் 7% வரி செலுத்த வேண்டும்.
  • மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி.யை 5% ஆக குறைக்க பரிந்துரை. மின்சார வாகனங்களை வாங்குவதற்கான கடன்களுக்கான வட்டி மீது, ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு.
  • மார்ச் 31, 2020ம் ஆண்டு வரை குறைந்த விலையிலான வீடுகளை வாங்குவதற்கான கடன்கள் மீது ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு. இதன் மூலம் வீடுகளை வாங்குவோருக்கு ரூ.7 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
  • எரிபொருள் மீதான கலால் வரி ரூ.1 உயர்வு.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சரியான கணக்குகளை தாக்கல் செய்தால், வருமானவரித்துறை சோதனை கிடையாது.
  • உலகளவில் இந்தியாவின் கல்வித்தரத்தை, புதிய தேசிய கல்விக் கொள்கை மாற்றியமைக்கும்.
  • ரூ.20 நாணயங்கள் விரைவில் வெளியிடப்படும்.
  • வங்கி கணக்கிலிருந்து, ஓர் ஆண்டில், ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 2% வரி(TDS)
  • புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும்.
  • ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி ஒதுக்க முடிவு.
  • ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சம் கோடி தேவை எனப் பரித்துரை.\
  • வரும் 2022ல், நாட்டின் 75ஆவது சுதந்திரத்திற்குள் அனைத்து ஊரக வீடுகளும், மின்வசதி, கேஸ் இணைப்பு தரப்பட்டுவிடும்.
  • ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வருவாய் உள்ள 3 கோடி சில்லறை வணிகர்ககளுக்கு ஓய்வூதிய திட்டம் (தேவை: ஆதார் & வங்கி கணக்கு)
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள கடன்களை வழங்க பரிந்துரை.
  • பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதலமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு.
  • பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி ஈட்டப்படும்.
  • உள்கட்டமைப்புத்துறை முதலீட்டை பெருக்க கடன் பத்திரங்களில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
  • தேசிய அளவில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.