மோடி தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்வில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “ பிரதமர் தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்வில்லை என்று மீண்டும் கூறியுள்ளார். அவர் இப்படிப் பேசுவது அவருக்கு நினைவு இழந்துவிட்டதாலா அல்லது இப்படிச் சொல்லுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறாரா? ஏனெனில் கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஒரு பகுதி இதோ” என்று ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார்.

5-12-2014: மொஹாரா, ஜம்மு காஷ்மீர்

10-4-2015: டாண்டேவாடா

27-1-2016: பாலமு

19-7-2016: ஔரங்காபாத், பீகார்

2-2-2017: கோராபுட், ஒடிசா

10-5-2017: சுக்மா

27-10-2018: அவாபல்லி, சத்தீஸ்கர்

9-4-2019: டாண்டேவாடா

“இதை யாராவது அவருக்குப் படித்துக் காட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.