வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கதிர் ஆனந்த் சுமார் அதிமுகவின் ஏ.சி. சண்முகத்தைவிட 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு ரத்து செய்யப்பட்ட தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும் களத்தில் இருக்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம் சுமார் 15 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.

ஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் முன்னிலை நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஏ.சி.சண்முகம் திடீர் திருப்பு முனையாக 12,158 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

தற்போது வரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,91,579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,80,032 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 20,309 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது ஏறத்தாழ 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்துவருகிறார்.