மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றிய போதும் முன்னறிவிப்பின்றி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறிய வேதாந்தா நிறுவனம், ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை முறையாகப் பின்பற்றிய போதிலும், ஆலையை முன் அறிவிப்பின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டதாக வேதாந்தா நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது எனவும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் வழக்கில் அடுத்த வாரம் மூன்று நாட்கள் வாதங்கள் வைக்க அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தனர்.