பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று(30.05.2019) மத்தியில் பதவியேற்றது. இது தொடர்பான அப்டேட்கள் பாஜகாவுக்கு சொந்தமான Bharatiya Janata Party இணையதளத்தில் வெளிவரும் என பாஜக ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். மேலும் வகைவகையான மாட்டிறச்சி புகைப்படங்களும் இணையதளம் முழுவதும் நிரம்பியுள்ளது.

இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டு சரிசெய்யப்பட்டது.