பாதிக்கப்பட்ட ஆண் சமூகத்திற்கு மட்டும் எப்போது நியாயம் கிடைப்பதே இல்லை என்று புலம்புவர்களுக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆண்களுக்கு ஆதரவாக நடந்துமுடிந்த வழக்குகளைத் தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.

உறவுமுறைகளில் அத்துமீறல்:

கடந்த 2013ஆம் ஆண்டு கோவாவில் இரு ஊழியர்களுக்கு நடுவே ஏற்பட்ட காதல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. யோகேஷ் பாலேகர், காசினோ நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இவர் தனது காதலியை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்த வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரது பெற்றோர் இல்லை. எனவே அப்பெண் அவர் வீட்டிலேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது இருவரும் தங்களின் உணர்வெழுச்சியின் காரணமாக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகுதான் தெரிகிறது அவர்களுக்கிடையே இருப்பது காதல் அல்ல வெறும் உடல்சார்ந்த இச்சை என்று. பிறகு தன் காதலியை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரென்று திருமணம் செய்ய மறுக்கிறார் பாலேகர். பிறகு அக்காதலி  ‘என்னை பாலேகர் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார்’ என்று போலீஸில் புகார் அளிக்கிறார். மேலும் அவர், ‘என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி எமாற்றிவிட்டார்’ என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பாலேகர் குற்றமற்றவர் என்று நிரூபித்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இது இருவருக்கிடையேயான ஆழமான காதல் விவகாரம்தான் வேறெதுவுமில்லை’ என்று கூறியுள்ளனர்.

இதேபோல் 2017ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் குனால் மண்டாலியாவின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. குனால் ஒரு பெண்ணை ஏமாற்றி வன்புணர்வு செய்துள்ளார் எனவும் அப்பெண்ணுடனான உறவு கசந்தபிறகு என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார் எனவும் கூறினார் பாதிக்கப்பட்ட பெண். இது குறித்து நீதிமன்றம் “இருவரின் விருப்பத்திற்கிணங்கி உறவுகொண்ட பிறகு அதற்கான பின்விளைவுகளும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உண்மை உங்களை சிறையில் அடைக்கலாம்:

ஒரு உறவில் தொடர்ந்து நீடிப்பதென்பது அவர்வர்களின் தனிப்பட்ட விருப்பம், தவறான கருத்து மற்றும் தவறான விளக்கங்களை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் தனிப்பட்ட நபருக்கு சார்பாக இயங்காது என்று கூறியுள்ளது மேலும் கடந்த சில வருடங்களாக ஆண்களுக்கு எதிராக புனையப்படும் பொய் வழக்குகளுக்கு சரியான தீர்ப்பை வழங்கி அவர்கள் பக்கமே நின்றுள்ளது. குறிப்பாக ‘திருமணம் செய்துகொள்வதாக என்னை ஏமாற்றினார்கள்’ என்று பொய்கூறும் பெண்களுக்கு எதிராகவே இந்த வழக்கின் முடிவுகள் அமைந்துள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல ஆண்களை, பாலியல் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது. அதுபோல பெண்கள் சொல்வதில் நேர்மையான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே ஆண்கள் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் நீதிபதிகள் கூறுகின்றனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதி:

ஆறு வருடங்களுக்கு முன்பு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 39 வயதான ஒருவரை, நீதிபதி சாதனா ஜாதவ் விடுதலை செய்தார். அவ்வழக்கின் தீர்ப்பில், “இவர் மீது குற்றசாட்டிய பெண் தன்னுடைய முழு ஈடுபாடுடனே உறவில் ஈடுபட்டுள்ளார். இது வன்புணர்வு கிடையாது. ஒருவருடன் ஹோட்டலுக்குச் சென்று பிறந்தநாள் விழா கொண்டாடும் அளவுக்கு நல்ல உறவுமுறையில் இருந்த பெண்ணிற்குத் தன்னை தவறாக நடத்தும்போது தெரியாமல் இருந்ததா? அதுமட்டுமின்றி ஏன் எந்தவித சத்தத்தையும் எழுப்பி அங்கிருப்பவர்களின் உதவியை அவர் பெறவில்லை” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எப்படி நிரூபிப்பது?

கடந்த மாதம் சட்டிஸ்கர் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிக்கொண்டார். ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி வன்புணர்வு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டார் இவர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இருவருக்கிடையேயான தொடர்பின் ஆரம்பகாலகட்டத்தில் எந்தவித முன்முடிவும் இல்லாமல்தான் மருத்துவர் பழகியிருக்கிறார், வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் உறவுக்கு இணங்கி உறவுகொண்ட பிறகு பின் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றினார் என்பது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னுடைய ஆயுதங்களை பயன்படுத்தி பழிதீர்த்தல்:

கடந்த ஏப்ரல் 2017ஆம் ஆண்டு நீதிபதி ப்ரதிபா ராணி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புபடி ஒருவரை விடுதலை செய்துள்ளார். நீதிபதி இவ்வழக்கைப் பற்றி கூறுகையில், “ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து அவர்களுக்கிடையேயான உறவுமுறைகள் அமைகின்றன, இதில் பெண்கள் நீதிமன்றத்தை தனிப்பட்ட பிரச்சினைகளுக்குப் பழிதீர்க்க பயன்படுத்திக்கொள்கிறார்கள்”.

மேலும் ப்ரதிபா ராணி, பாலியல் வன்புணர்வு மட்டும் இணக்கமான உறவுமுறைகளுக்கியேயான விளக்கத்தை கூறுகிறார், ‘அதாவது கோபம் மற்றும் உறவுமுறைகளின் விரக்தியின் காரணமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு நீதிமன்றம் என்றும் செவி சாய்க்காது’ என்று கூறியுள்ளார்.

தவறான வாக்குறுதிகள்:

தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி  பயன்படுத்திக்கொண்டார் என்று பெண் கூறுவதற்குமுன் ஆண் ஜாமீன் கேட்கும் சம்பவமும் இங்கு நடந்துள்ளது, கடந்த 2017 ஆண்டு புனேவைச் சேர்ந்த 21 வயதான ஒருவர்மீது பெண் பாலியல் வன்புணர்வு தொடர்பாக குற்றம்சாட்டினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆண் பெண் இடையேயான வழக்கமான இப்பிரச்சினையை இந்நீதிமன்றம் மறுபடியும் மறுபடியும் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆண் பெண் உறவுமுறையின் இறுதிநிலை எப்போதும் பிரிவில் சென்று முடிந்துவிடுகிறது. சந்தேகத்திற்கிடமின்றி ஒருவர்மேல் காதல் கொண்டுதான் உறவில் ஈடுபடுகிறார்கள். பின்பு எப்படி சுயநலமாக முடிவெடுக்கிறார்கள் என்றே குழப்பமாக இருக்கிறது, எல்லா வழக்குகளுமே என்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லிதான் பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

நன்றி: economic times