இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்காளம் ஆகியவற்றில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக தீவிரமடையக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானிலை மையம் வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

ஃபானி புயல் அடுத்த 72 மணிநேரத்திற்குள் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து இலங்கையின் கடலோரப் பகுதியில் அடையக்கூடும். ஏப்ரல் 30 ம் தேதி வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோர பகுதிகளுக்கும் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் தமிழகத்தைத் தாக்காது. சென்னை அருகே கரையைக் கடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் எனத் தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை வானிலை கணித்துள்ளது. ஏப்ரல் 30 மற்றும் மே 1 அன்று வடக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையின் ஆழமான கடல் பகுதிகளுக்குள் செல்வதற்கு மீனவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கையின் கடலுக்குள்ளும் செல்ல மீனவர்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏப்ரல் 29 முதல் மே 1 வரை அதிகமாக இருக்கும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகள், கொமோரின் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் கேரளாவில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 50 கி.மீ வரை வீசும் என வானிலை மையம் கணித்துள்ளது.