தான் விரும்பிய எல்லாவற்றையும் கண்டடைபவர்கள் என்று இவ்வுலகில்  யாரும் இல்லை.ஒவ்வொருவரும் விரும்பியதை தேடிகண்டடைவதிலே தான் மனித மனம் திருப்தி கொள்ளும். தனது தேடலில் தான் நினைத்ததை அடைய முடியாத போது தோல்விகள் ஒருவனை அழுத்துகிறது . ஒவ்வொரு முறைதோல்வியை தழுவும் போது மனம் தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. .நமது சமூக சூழலில் பெரும்பாலும் தோல்விகளை தாங்கும் மனோ பாவம் இல்லை. அத்தகைய சமூக கட்டமைப்பு உடையது நமது பொது சமூகம். முழுக்கவும் சமூகம் சார்ந்து தான் தனது தோல்விகுறித்து அச்ச உணர்வுகள் எழுகிறது. நான் பிறந்தது கஷ்டப்படுவதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் தலை தூக்கும் போது நம்மை நாமே ஏமாற்றி கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றி கொண்டு தினமும் கடக்கும் சூழலில் தான் நிதர்சனத்தை காணும் போது தற்கொலை எண்ணம் தீவிரமாக தலை தூக்குகிறது.

அன்பு நிராசையாகும் போது நமக்குள் எழும் உளவியல் மாற்றங்கள் தான் மனஅழுத்தத்திற்கு நம்மை ஆளாக்கும். இலக்கியமும் வாழ்வும் வேறு வேறல்ல என்பதை  டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவல் நமக்கு முழுமையாக உணர்த்துகிறது

அன்னா ஆன்மாவில் மலரும் பெண். கரீன் அற்புதமான மனிதர். ஆனால் தன் உணர்வுகளுக்கும் உயிர் துடிப்பான ஜீவனுக்கும், வடிகால் இல்லாமல் வெற்று வாழ்க்கையில் தன் மொத்த அன்பையும் குழந்தைக்கு அர்பணித்து குழந்தைக்காக வாழ்கிறாள் அன்னா.  இந்நிலையில் தான் விரான்ஸ்கியை சந்திக்கிறாள். விரான்ஸ்கியை சந்திக்கும் வரை கணவருடன் வாழும் வெற்று வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. ஆனால் விரான்ஸ்கியை சந்தித்த பின் கணவருடன் வாழும் வாழ்க்கையில் காதல் இல்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளுக்குள் இருக்கும் மனம் கொதிக்க தொடங்குகிறது. அங்கிருந்து தான் அன்னாதன் உணவுர்களை காதலை புதிய நேசத்தைபுதிய வாழ்க்கையை  ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு சமூகம் தரும்அழுத்தம் மிக அதிகம். இதையெல்லாம் எதிர் கொள்ளும் திராணி அவளுக்குஇல்லை. சமூக அழுத்தமும் தன் மேல் உள்ள அளவற்ற நம்பிக்கையும்விரான்ஸ்கி மேல் உள்ள அதீத காதலும் அவளை ஸ்திரமற்ற நிலையில் இருக்க காரணமாகிவிடுகிறது. அளவு கடந்த காதல் வீரான்ஸ்கி யை சந்தேகம் கொள்ள வைக்கிறது. மனம் கொந்தளிப்பில், அழுத்தத்தில் தவிக்கிறாள்.

அன்னாவின்  அதிக பட்ச அன்பை எதிர் கொள்வதில் விரான்ஸ்கி தவிக்க நேரிடுகிறது. பிறருக்கு தண்டனையாக மரணத்தை அளிப்பதன் மூலம் ஒருவகையில் பிரச்சனையின் குரூரங்களிலிருந்து தப்பித்தாலும் அதில்  வன்மும் அடங்கி உள்ளது அன்னாவுக்கு வன்மம் இல்லை.ஆனாலும் அவள் விரும்பியதை  முழுமையாக அடையமுடியவில்லை என்ற எண்ணம் அவளை தற்கொலைக்கு தூண்டுகிறது.

விரான்ஸ்கி தன்னை மறக்க முடியாத அளவிற்கு அவனுக்கு தண்டனை தர வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறாள். அன்னாவின் உளவியலை அற்புதமாக டால்ஸ்டாய் எழுதி இருப்பார். அன்னா மட்டும் அல்ல நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரின் மனமும் அவரது எழுத்தின் வாயிலாக வெளிபட்டு இருக்கிறது.

நம்மிடம் உள்ள ஒன்றை தொலைப்பதற்குமுன்னரே நம் மனதின் ஏதோ ஒன்று அதை அறிந்துவிடுகிறது. அல்லது, தொலைந்தபிறகு, மனம் தொலைத்த ஒன்றை உருவகித்துக் கொள்கிறது.

நம்முடன்  கூடவே இருப்பவர்கள்  கூடவே இருப்பவரின் துக்கத்தை, மகிழ்ச்சியை உணர்ந்து பரிசீலிக்கிறார்களா, என்று மனம் ஏங்க ஆரம்பித்து விடுகிறது. யார் தனது துக்கத்தை புரிதலால் நெருங்குகிறார்களோ

அவர்கள் காலத்தின் உண்மையை அறிய செய்கிறார்கள். அதனால் தான்வரலாற்று நெடுகிலும் அரசியல் தோல்விகள், போர்கள் என மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அடைந்த தோல்விகள் ,எல்லாமுமே அனைத்தின்சாயலோடு பிரதிபலிப்புகளோடு இப்பூமி உயிராற்றலை, தந்து கொண்டே இருக்கிறது. பூரணவிடுதலை, அமைதி என்பது மரணத்தில்தான் இருக்கிறது என்பது காலம் காலமாக நமது பொது புத்தியில் உறைந்து இருக்கிறது

பழைய நினைவுகள் ஏமாற்றத்தின் வலிகள், நிராகரிப்பின் ரணங்கள், எல்லாமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது .

உரையாடல்கள், வெளியில் நிகழும் அனுபவங்களுக்கு எதிராக அகத்தில் நடந்து கொண்டேயிருக்கும் போராட்டம் மன அழுத்தத்தின் தீவிர நாட்களாக உருவகிக்கப்படுகிறது அதுவரையில் கற்பனையாக சொல்ல பட்ட மனம் நிஜத்தில் தனது குரூரத்தை காண்பிக்க ஆரம்பித்து விடுகிறது.  ‘எந்த வலியையும் தாங்கமுடியாத போதுதான், அதை விட்டுப் பிரியநினை தற்கொலை குறித்த பொது காரணங்கள்:

இந்தியாவில் திருமணமான பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்திருக்கிறார்கள்   குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், குழந்தைத்திருமணம், சிறுவயதில்தாய்மைஅடைதல், தாழ்ந்தசமூகநிலை, குடும்பவன்முறை மற்றும் பொருளாதாரவிடுதலையின்மை ஆகியவையே திருமணமான பெண்களின் தற்கொலைக்கு மிகமுக்கியகாரணிகளாக அமைகின்றன

கடந்த 2018ம்ஆண்டுஇந்தியாவில்ஒட்டுமொத்தமாக 1,34,516 பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசியகுற்ற ஆவண பதிவேடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம்ஆண்டைவிட 2018ம்ஆண்டில் 3.6 சதவீதம் அதிகமாக தற்கொலைகள் நடந்துள்ளன.

தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உலகளவிலும், இந்திய அளவிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. ஓர் ஆண்டில் சராசரியாக 8,00,000 லட்சம்மக்கள் சர்வதேச அளவில் தற்கொலை செய்வதாக உலகசுகாதாரநிறுவனம்  அறிக்கைவெளியிட்டுள்ளது,

மகாராஷ்டிராவில்அதிகபட்சமாக 2018ம் ஆண்டில்மட்டும் 17,972 பேரும், தமிழ்நாட்டில் 13,896 முறையே மகாராஷ்டிரா (13.4%), தமிழ்நாடு (10.3%), என தற்கொலை செய்து கொள்கின்றனர் .

மனஅழுத்தம், குற்றவுணர்வு, உடல்நலக்குறைவு, நிதிச்சிக்கல்கள் உள்ளிட்ட பல பொது காரணங்கள் ஒருவரை தற்கொலைக்குத்தூண்டுவதாக கருதப்படுகின்றன. அதையும் தாண்டி தனி மனித அக சிக்கல்கள் தற்கொலையில் முடிகிறது.  அப்படியான தாங்க முடியாத வேளையில் மனத்தைக் தேற்ற நட்புகள் உதவும். நிபந்தனை அற்ற அன்புக்கு எதுவும் சாத்தியம் .

கஷ்டங்களிருந்து தப்புவதற்காக மனித மனம் தனது பகுத்தறிவின் மூலம் சிந்திக்கும்திறனை பெற்று இருக்கிறான். மனதை சிந்திக்க விடாமல் மூடுபனி போல் மறைத்திருக்கும் மெல்லிய திரையைவிலக்கி  நாம் எல்லா சூழல்களிலும்  மனதை பக்குவp படுத்த வேண்டும்..அதற்கான சாத்தியகூறுகள் கொண்டது தான் மனிதமனம்.

ஒவ்வொருவரும் அரவணைப்பும் அன்பும் வேண்டுபவராகத்தான் இருக்கிறோம். அதற்கான எல்லா சாத்தியங்களும் இப்புவியில் உண்டு.

நாம் தான் எல்லா கதுவுகளையும் திறந்து பார்க்க மறுக்கிறோம்.

பெண்களுக்கான உரிமையை சம வாய்ப்பை இச்சமூகத்தில் இருந்து பெருவது இன்னும் இன்னும் சாத்திய படாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

அவை எல்லாம் சரி ஆகும் பட்சத்தில் பெண் இன்னும் உயிர்ப்போடு

இச்சமூகத்தில் வலம் வருவாள்..