பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈஃபில் டவரில் இளைஞர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி, அதன் உச்சியினை அடைய வேண்டும் என ஏறியுள்ளார். அவர் சிறிது தூரம் ஏறிய பின்னர் அங்கிருந்த சில சுற்றுலா பயணிகள் அவரை கவனித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

பாதுகாப்பு படையினர் முதலில் சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக அப்புறப்படுத்தினர். அந்த இளைஞரை கீழே இறக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதற்குள் அந்த இளைஞர் 488 அடி உயரத்திற்கு கிடுகிடுவென ஏறிவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் சேர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஒரு நாளில் பல லட்சம் பேர் வருகைத்தரும் இந்த ஈஃபில் டவரில் திடீரென்று மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வேதனையடைந்தனர்.

அவர் எதற்காக ஈஃபில் டவர் மீது ஏறினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து டவர் மீண்டும் இன்று உள்ளூர் நேரப்படி, 9.30 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.