உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாளுக்குநாள் தொழில்நுட்ப வளர்ச்சி, பல அறிய கண்டிபிடிப்புகள், குறைந்த நேரத்தில் அதிக பயன்பாடுகள், மெகா சைஸ் எல்லாம் தற்போது மைக்ரோ சைஸாக மாறியிருப்பது என ஒட்டுமொத்த நாட்டின் அல்லது உலக மக்களின் வளர்ச்சியாக இன்றைய இணைய சேவை அமைந்துள்ளது. அதாவது தொலைதொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி இணைய சேவையில் பெரும்பங்காற்றியுள்ளது.

இன்று உலகமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாறி வரும் வேளையில், மேரி மீகர் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இணைய பயன்பாட்டில் சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மக்களிடையே ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு அதிகமானதை தொடர்ந்து பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது இணைய சேவையை மிகவிரைவாக, குறைந்த கட்டணங்களில் அளிக்க ஆரம்பித்தனர். இதன் விளைவால் பல கிராமங்கள் இன்று இணைய பயன்பாட்டை பெற்றிருக்கின்றன. மக்களின் பல வேலைகள் மிக சுலபமாக இன்று இணைய சேவையால் நடந்தேறுகிறது.

மேலும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளதாகவும் இந்த தகவல் தெரிவிக்கின்றது.