கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிர்கா கடல்நீரின் மட்டம் உயர்வதால் மிகவிரைவில் வங்கதேசம் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்(National Academy Of Science) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்பது ஒரு  அமெரிக்காவின் லாபமற்ற, அரசு சாரா அமைப்பாகும். இந்த அமைப்பு முன்பு கணித்திருந்த கணிப்பின்படி, 2100 ஆண்டுக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் அளவிற்கே உயரும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை மிகவும் மோசமாகியிருப்பதால், 6 மீட்டர் அளவுக்கு அதிகமாக உயரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதன் காரணமாக, 10 லட்சம் சதுர கி.மீட்டருக்கு மேற்பட்ட நிலம் பறிபோகும். அதாவது, லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் கடலில் மூழ்கும்.

மேலும், “முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்நீரின் மட்டம் விரைவாக உயர்ந்துவருவதால் வருங்காலத்தில் வங்காள தேசத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்படலாம்” என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா கடல்நீர் மட்டம் விரைவாக உயர்வதுதான் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். அதன் விளைவாக 24 லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன்,  நியூயார்க், சாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்படுகிறது.