த்திய பிரதேசத்தில் முன்னாள்  முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் பல்வேறு துறைகளின் ரூ. 8,017 கோடி மதிப்புள்ள நிதியியல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அரசு தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

சில உதாரணங்களைப் பார்ப்போம்

மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டு ஸ்தாபன லிமிடெட், 15 வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு ரூ. 8.96 கோடி நிதி மாநிலத்தின் தொழில்துறை இயக்குனகரம் “5531 மத்தியப் பிரதேச முதலீட்டு இலக்கு” திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளது.

மணல் சுரங்கம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய சி.ஏ.ஜி ஆய்வின்படி, பால்காட் மற்றும் உஜ்ஜைனின் கலெக்டர்கள் 31 சுரங்கங்களில் மதிப்பிடப்பட்ட அளவிலான மணல் மதிப்பீட்டிற்குப் பதிலாக குறைந்த வாடகையை நிர்ணயம் செய்தனர்.  இதன் விளைவாக ரூபாய் 3.37 கோடி மதிப்புள்ள குறைந்த உரிமத்தொகையே கிடைத்தது.

மேலும், 18 பிரிவுகளின் நிர்வாக பொறியாளர்கள், 1,489.67 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர் வரியை தொழிற்சாலைகள், உள்நாட்டு நீர் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கத் தவறினர்.

அதேபோல 18 மாவட்ட சுரங்க அலுவலகங்களில் ரூ. 62.50 கோடிக் குத்தகை மற்றும் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து வசூலிக்கவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இவையெல்லாம் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி மார்ச் 30, 2017வரை நடந்த முறைகேடுகளை மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் ஜனவரி 11 2019 ஆம் தேதி  தாக்கல் செய்த அறிக்கையில்  சில உதாரணங்களே ஆகும். மாநில அரசு 18,080 கோடி ரூபாய் மானிய உதவி மையங்களில் பயன்பாட்டுச் சான்றிதழ்களை (UC ) சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என அறிக்கையில் உள்ளது. போபால் தொல்துறை ஆணையருக்கு நிதி ஆணையம் 2013-2014  மற்றும் 2015-2016 இல் வழங்கிய 74 கோடி ரூபாய் முழுவதும் பயன்படுத்தாமல் ஆனால், பயன்படுத்தப்பட்டதாக ஆணையரால் கணக்கு காண்பிக்கப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.

“பாஜக. அரசாங்கத்தின் நிதியியல் முறைகேடுகள் மற்றும் பலவீனமான நிதி மேலாண்மை அம்பலமானது. முந்தைய அரசுக்கு விசுவாசமாக ஒரு  குழு இன்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்ததிலிருந்து தெளிவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய் இழப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன” என் தற்போதைய முதல்வர் கமல்நாத் இந்த அறிக்கையைப்பற்றித் தெரிவித்தார்.  மேலும் இந்த அறிக்கையின்படி, மாநில எரிசக்தித் துறையானது,  தானியங்களிலிருந்து மது எடுக்கப்படுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் 1,086 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க வருவாயை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்காமல், மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியதின்மூலம் அந்நிறுவனங்களுக்கு 653.08 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. மேலும் 401 நாட்களாக இதற்கான மது சரிபார்ப்பு சான்றிதழ்களை வழங்காத 12 நிறுவனங்களுக்கு ரூ. 462.77 கோடி அபராதம் விதிக்க அரசுத்துறை தவறிவிட்டது.

நீர்வள ஆதாரதுறை, பி.டபிள்யு.டி, மற்றும் நர்மதா பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை 242 முழுமையற்ற திட்டங்களைக் கொண்டிருந்தன அவற்றின் திட்ட மதிப்பு 9557 கோடி. இதில் 24 திட்டங்களில் மட்டும் 4800 கோடி வரம்பிற்கு மீறிய நிதி செலவாக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் கடன்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த நிதிஅமைப்பை உருவாக்கவில்லை என்று சி.ஏ.ஜி. தணிக்கையாளர்கள் கண்டறிந்தனர்.

அனைத்து துறைகளிலும் செய்யப்பட்ட தணிக்கையில்  2013-2014 இல் இருந்து 2015-2016 வரை 4535.40 கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகையை 646 ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

சி.ஏ.ஜி.யின் அறிக்கைக்குப் பின்னர் பாரதீய ஜனதா கட்சியின்மீது எழும் கடும் எதிர்ப்புகளைக் கண்டு முதலமைச்சர், “ஒரு ஆய்வு நடத்தப்படும். விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். நாங்கள் ஜான் ஆயோக் (மக்கள் ஆணையம்) ஒன்றை அமைத்து அதில் இது சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் ஒப்படைத்து விடுவோம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஒருவரைக்கூட விடமாட்டோம்.”  சி.ஏ.ஜி. அறிக்கை ஒரு முன்னோட்டம்தான் முழு படம் இன்னும் வரவில்லை. பார்த்துக் கொண்டேயிருங்கள்.” என்றார்.

சி.ஏ.ஜி. அறிக்கை மற்றும் முதல்வர் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தரி, “சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து புள்ளிவிவரங்களும் சரியானது அல்ல, ஏனெனில் அவை முறையற்றவை என்று நகராட்சி அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்”  என்றார்.

ஆட்சி நிர்வாகம் துளியும் அற்ற, எந்த வித திட்டமிடல் இல்லாமலும், மக்களின் மீது அலட்சியமும், உள்ள அரசு எப்படி இருக்குமென்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.