எப்.ஐ.சி.சி.ஐ மகளிர் அமைப்பும் இணைந்து  ஏர்டெல் நிறுவனம் பெண்கள் பாதுகாப்பிற்காக பயனளிக்கும் வகையில் மை சர்க்கிள் என்ற புதிய செயலியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

மை சர்க்கிள்(My Circle) செயலி பெண்களுக்கு உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த இலவச அப்ளிகேஷனை ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும் பயன்படுத்தலாம். இந்த மொபைல் ஆப் மூலம் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த 5 பேருக்கு அவசர உதவி கேட்டு குறுஞ்செய்தியினை அனுப்பலாம்.  அவசர உதவி கோரும் மெசேஜை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் அனுப்ப முடியும். இந்த அவசர உதவி மெசேஜ் அனுப்பவதை ஐபோன்களில் சிரி (iphone siri)மூலமும் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டெண்ட் (Google assistant) மூலமும் குரல் கட்டளை (voice command) அளித்தும் இயக்க முடியும்.

இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ததும் தங்களுக்கு எந்த நேரத்திலும் அவசர உதவி செய்யக்கூடிய 5 பேரின் தொடர்பு எண்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும். மேப்உடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவசர உதவி கேட்டு அனுப்பும் மெசேஜில் உள்ள இணைப்பின் வழியாக உதவக்கூடியவர்கள் பெண்ணின் அவ்வப்போதைய இருப்பிடத்தை பின்தொடர முடியும்.  இந்த மொபைல் ஆப் தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் கிடைக்கிறது. விரைவில் ஐபோன்களுக்கும் கிடைக்கும்.