அஜித் நடித்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் அவரது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகுமென சொல்லி பின்பு ஆகஸ்டுக்கு தள்ளிப்போட்டனர்.

மே 1-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி எதுவும் இல்லை என பேசப்பட்ட நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு முக்கிய அறிவிப்பு அன்றைய தினம் வெளியாகவுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு தொடங்கவுள்ள அஜித் 60 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவலை மே 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு அல்லது வினோத் உடன் அஜித் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாக சொல்லப்படுகிறது. மூவரில் யார் அஜித் 60 படத்தை இயக்குகிறார் மற்றும் அதுபற்றிய தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.