அருள்நிதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள கே 13 (K-13) திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
சைக்கோலாஜிக்கல் த்ரில்லர் வகை படமான இதில் ஷ்ரதா சாய்நாத் அருள்நிதியுடன் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் கே 13 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
யோகி பாபு, ரமேஷ் திலக், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நடிக்கும் இப்படத்தில் காயத்திரி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்.C.S இசையமைத்திருக்கும் இப்படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் வெளியீட்டுத் தகவல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.