திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக‌ (நேற்று) மார்ச் 28 அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை வழக்கமான தமிழ் சினிமாவின் மாசலா தனம் இல்லாது படமாக்கக்கூடிய ஒரே இயக்குநர் என்று 70களில் போற்றப்பட்டவர்.

1978-ம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர். அதற்கு முன்பு பல படங்களில் கதை மற்றும் திரைக்கதைகளில் வேலை செய்துள்ளார். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நண்டு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியப் படங்களை இயக்கிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர்.

கடந்த சில ஆண்டுகளாக தெறி, பேட்ட, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் எனவும் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்  என்றும் அவரது மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார். அவ‌ரைக் காண நெருக்கமான நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.