‘தடம்’ வெற்றிக்கு பிறகு ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் அருண் விஜய்.

தொடர்ந்து வெற்றிப்படங்களாக வந்துகொண்டிருக்கும் அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

துருவங்கள் 16, நரகாசூரன் படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.