எம்.ஜி.ஆர் – எம்.ஆர். ராதா இருவருக்கிடையேயான உறவை மையப்படுத்தி உருவாக்கப்படும் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமையாக விளங்கிய எம்.ஜி.ஆர், நடிகர் எம்.ஆர். ராதா ஆகியோரது உறவு பரவலாக பேசப்பட்ட வரலாறாக உள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தை எம்.ஆர். ராதாவின் பெயரன் ஐ.கே இயக்குகிறார். ராடான் மீடியா சார்பாக ராதிகா இதனை தயாரிக்கவுள்ளார்.
சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தின் மூலம் அறிமுகமான ஐ.கே இயக்கும் இப்படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், எம்.ஆர். ராதாவாக சிம்புவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.