அறிவிக்கப்பட்ட பின்னரும் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்த கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஆயத்தப் பணிகள் நேற்று தொடங்கியன.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு மதுரையில் நேற்று தொடங்கியதாக கூறப்பட்டிருக்கிறது.
வடசென்னை, மாரி 2 படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இது எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி உருவாக்கப்படும் படமாகும். பேட்ட வெற்றிக் களிப்பில் இருக்கும்  கார்த்திக் சுப்பராஜூம் தனுஷ் படத்தில் உற்சாகமாக களமிறங்குகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் இணைந்து பணியாற்றவுள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டே கூறப்பட்ட நிலையில் இப்போதுதான் அதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.