அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே 13’ திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் நேற்று (ஏப்ரல் 22) அறிவிக்கப்பட்டது.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பரத் நீலகண்டன் இயக்கும் இப்படத்தில் அருள்நிதியுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் ‘கே 13’ சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.