காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்மபிரபு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எமதர்மனாக யோகி பாபு நடித்திருக்கும் இப்படத்தில் சமூக கருத்துக்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் பாணியை ட்ரைலரில் நாம் பார்த்தோம்.

ரமேஷ் திலக், ஜனனி ஐயர் உள்ளிட்டவர்களும் நடித்துள்ள இப்படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு நிறைவிடைந்துள்ளதால் இறுதிக்கட்ட பணிகளுக்குப் பிறகு அடுத்த மாதம் இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக வருகின்ற மே 8-ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு, இறுதிக்கட்ட பணிகளைப் படக்குழு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.