‘மரகத நாணயம்’ புகழ் ARK. சரவணன் இயக்கும் அடுத்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பதை நேற்று பார்த்தோம்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ARK. சரவணன் இயக்கும் அந்த படத்தில் ஆர்யா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேண்டஸி காமெடி வகைமையில் ARK. சரவணன் இயக்கிய ‘மரகத நாணயம்’ நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பிறகு அவர் இயக்கத்தில் படம் எதுவும் தொடங்கப்படவில்லை.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தை சரவணன் உருவாக்கும் தகவல் வெளியான உடனேயே இன்று ஆர்யா நடிப்பதாகவும் கூறியுள்ளனர்.