விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ மட்டுமின்றி ஓவியா நடிப்பில் இந்தியாவில் வெளியான ’90 ML’ மற்றும் சாருஹாசன் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ ஆகிய திரைப்படங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழர்கள் மிக அதிகளவில் வாழும் மலேசியாவில் கடந்த வார தமிழக வெளியீட்டில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ் தடை செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிகிறது.

மலேசியா போன்ற நாடுகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் இதுபோன்ற அடல்ட் கன்டென்ட் படங்கள் தடை செய்யப்பட்டு வருகின்றன.