‘சூர்யா 39’ படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமென கூறப்பட்ட நிலையில், இதனை சிறுத்தை சிவா இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் என்.ஜி.கே, காப்பான் ஆகிய படங்கள் கிட்டத்தட்ட தயாராக உள்ளன. இந்தப் படங்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இன்று திடீரென ‘சூர்யா 39’ அறிவிப்பு வெளியாகிறது என சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.