‘சூர்யா 39’ திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க சிவா இயக்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படத்தில் பணிபுரியும் முக்கிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
இதன் ஒளிப்பதிவாளராக வெற்றி பணியாற்றவுள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துவரும் சூர்யா தொடர்ந்து இதில் நடிக்கவுள்ளார். இன்னும் இதன் இசையமைப்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை.