இயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் நாளை வெளியிடுகிறார்.

‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்துக்குப் பிறகு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்ட சேரன், ‘திருமணம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இப்போது சாய் ராஜ்குமார் இயக்கத்தில் ‘ராஜாவுக்கு செக்’ எனும் திரைப்படத்தில் சேரன் நடித்து வருகிறார். ஆக்க்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் மூன்று நாயகிகள் உள்ளனர்.

ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா மற்றும் சராயு மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விசாரணை அதிகாரியாக சேரன் நடிக்கிறார். இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.