ஜீவாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘கலகலப்பு 2’. இதன் பிறகு அவர் அடித்த ‘கீ’, ‘கொரில்லா’ மற்றும் ‘ஜிப்ஸி’ ஆகிய மூன்று திரைப்படங்களின் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்திருக்கின்றன.

இதில் ‘கீ’ இம்மாதம் வெளியாகிறது. அடுத்ததாக ‘கொரில்லா’ திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உறுதி செய்யப்பட்ட தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வருகின்ற மே 17-ஆம் தேதி ‘கொரில்லா’ திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

சிம்பான்ஸி குரங்கு ஒன்று முக்கிய அங்கமாக இருக்கும் இப்படத்தை டான் சந்தோஷ் இயக்கியுள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நாயகியாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு, சதிஷ், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் நடித்திருப்பதால் நிச்சயம் இந்த கோடை காலத்துக்கு ஏற்ற காமெடி ட்ரீட்டாக ‘கொரில்லா’ இருக்குமென கருதப்படுகிறது.