ஹிப் ஹாப் தமிழா ஆதி – அனிருத் கூட்டணியில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

ராஜேஷ்.M இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவர்களோடு யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பதால் இதன் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அனிருத் பாடியுள்ள டக்குனு டக்குனு பாடல் இன்று வெளியாகிறது.

ஏற்கனவே, எதிர்நீச்சல் படத்தில் அனிருத் இசையமைத்த பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடிய நிலையில் இக்கூட்டணி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு – நண்பனுடன் மீண்டும்… என கூறியுள்ளார்.