வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் வரும் ஒத்த சொல்லால பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஜி.வி. பிரகாஷின் இசையில் ஏகாதசி இந்த பாடலை எழுதினார்.

இந்த கூட்டணி ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒரு பாடலுக்கு இணைந்தால் எப்படி இருக்கும்? அசுரன் படத்தின் அதுதான் நடந்திருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடிப்பில் படுபிஸியாக இருந்தாலும் இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பை ஜி.வி. பிரகாஷ் ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில், அசுரன் பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கும் ஜி.வி, ஒத்த சொல்லால கூட்டணி மீண்டும் இணைகிறது. அசுரன் படத்தின் சில பாடல்களை ஏகாதசி எழுதுகிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.