ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’தான் தமிழின் முதல் ஸாம்பி வகை திரைப்படம். இதன் வெற்றிக்குப் பிறகு இப்போது மற்றொரு ஸாம்பி மூவி தமிழில் தயாராகி வருகிறது.

தலைப்பே ‘ஜாம்பி’ என சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் யாஷிகா ஆனந்த் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர். பரிதாபங்களில் புகழ்பெற்ற கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பதால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

பூவன் ஆர் நுல்லன் இயக்கும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. S3 பிக்ச்சர்ஸ் ஜாம்பியை தயாரிக்கிறது.

பிரேம்ஜி இசையமைக்க விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இசை மற்றும் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளன.