ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ‘நீயா 2’ வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
மே 10-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்ட இப்படம், மே 24-ஆம் தேதி வெளியாகுமென மாற்றி அறிவித்துள்ளனர். இந்த தகவல் அடங்கிய புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சுரேஷ் இயக்கியுள்ள இப்படம், 1979-ல் வெளியான ‘நீயா’ திரைப்படத்தின் பாணியில் உருவாகியுள்ளது. பெண்ணாக உருமாறும் பாம்புதான் இதன் முக்கிய அம்சம்.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டை மாற்றி அறிவித்திருக்கிறார்கள். மேலும், இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.