தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் ”சூப்பர் டீலக்ஸ்” படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா.
ஆரண்ய காண்டம் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றுவிட்ட தியாகராஜன் குமாரராஜா மீது பரவலாக இப்போது கவனம் குவிந்திருக்கிறது. அவருடைய அடுத்த திரைப்படம் பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அடுத்து ”சூப்பர் டீலக்ஸ்” படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தியாகராஜன் குமாரராஜா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் தமிழில் நடித்திருந்த இப்படம் ஹிந்தியிலும் வரவேற்பை பெறுமென்பதில் சந்தேகம் இல்லை.