அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிற தடம் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த படங்களில் இடம்பெற்றுவிட்டது.

மகிழ் திருமேனி இயக்கிய தடம், கொலை வழக்கில் சிக்கிய இருவரை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லராக அமைந்தது.

இதனால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தடம், தெலுங்கு ரீமேக்குக்கு தேர்வு செய்யப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு வெளியானது.

தற்போது இந்த வெற்றிப் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். அருண் விஜய் நடித்த இரட்டை வேடங்களில் ஷாஹித் கபூர் நடிக்கவுள்ளார்.