நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளான இன்று, அவரது நடிப்பில் உருவாகும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
த்ரிஷாவுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில், இப்படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். ’96’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடி பெரும் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து இந்த ட்ரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
திருஞானம் இயக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் த்ரிஷா மருத்துவராக நடிக்கிறார். இன்று வெளியாகியுள்ள ட்ரைலர் ரசிகர்களால் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது