சாதிய சிக்கலை மிக காத்திரமாக பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு பிரான்ஸ் திரைப்பட விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன.
மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளையும், விவாதங்களையும் எழுப்பியது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது உட்பட, ‘பரியேறும் பெருமாள்’ ஏற்கனவே பல அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைவிமர்சன குழுவின் விருது, நடுவர்கள் சிறப்பு தேர்வு, ரசிகர்கள் தேர்வு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.