மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம், கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமரசித்துவந்த அவர் மக்களவை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அவருக்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துள்ள விஷால், தற்போதைய அரசியல் சூழலில் சுயேட்சையாகப் போட்டியிடுவது எளிதான காரியமல்ல. பிரகாஷ் ராஜுக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. அவருக்காக நானும் விசில் போடுகிறேன். வாழ்த்துகள் சார் எனக் கூறியுள்ளார்.