சயீஷா சைகலை திருமணம் செய்துகொண்ட நடிகர் ஆர்யா, அடுத்து தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது நடிப்பில் உருவாகும் ‘மகாமுனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை ஆர்யா உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆர்யாவுடன் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஜெயப்ரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்டவர்களும் நடிக்கும் ‘மகாமுனி’ படப்பிடிப்பு நிறைவுக்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.