உடல்நலக் குறைவால் காலமான இயக்குநர் மகேந்திரனுக்கு தொடர்ந்து ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த இயக்குநரது உடல் சென்னை நாராயணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு, சமூக வலைத்தளம் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளையராஜா, ரஜினி, கமல், வைரமுத்து, அறிவுமதி, ஷங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் உட்பட பல்வேறு திரைக்கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.