ஆர்யா நடிக்கும் படங்களில் ‘காப்பான்’ மற்றும் ‘மகாமுனி’ ஆகியவை அடுத்து வெளியாகும் நிலையில் உள்ளன. இரண்டுமே அவருக்கு மிக முக்கிய படங்கள் என்பதை சந்தேகமில்லை.
இதன்பிறகு ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் தலைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மின்னல் வீரன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.