மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பு குறித்து பெரிய நிறுவனத்திடம் பேச்சவார்த்தை நடைபெறுவதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட தயாரிப்பு செலவை பகிர்ந்துகொள்வது தொடர்பில், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறுகின்றனர்.