ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்துக்கு ‘தர்பார்’ என தலைப்பிட்டுள்ளனர்.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்குகிறது. பெயரிடப்படாமல் இருந்த இப்படத்தை ‘தலைவர் 167’ என குறிப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், இப்படத்துக்கு ‘தர்பார்’ என தலைப்பிட்டு, அதனோடு அட்டகாசமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.